10 வார சரிவுக்கு பின்னர் ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பு! WHO முக்கிய தகவல்
10 வார சரிவுக்குப் பின்னர் ஐரோப்பாவில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
10 வாரங்காள ஐரோப்பான முழுவதும் புதிக கொரோனா வைரஸ் நோய்த்தொற்று எண்ணிக்கை சரிந்து வந்த நிலையில், அது முடிவுக்கு வந்தள்ளது.
மக்களும் ஆட்சியாளர்களும் ஒழுக்கமாக இருக்காவிட்டால் புதிய அலையை தவிர்க்க முடியாது என ஐரோப்பா உலக சுகாதார அமைப்பின் தலைவர் Hans Kluge தெரிவித்தார்.
கடந்த வாரம் ஐரோப்பாவில் புதிய கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
பயணம், கூட்டங்கள் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை தளர்த்துல் ஆகியவற்றால் புதிக கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துள்ளது.
கவலைக்குரிய புதிய டெல்டா மாறுபாடு மற்றும் தொற்றை பரவலை தடுக்க ஐரோப்பா உறுப்பு நாடுகளின் பெரும் முயற்சிகள் இருந்தபோதிலும், மில்லியன் கணக்கான மக்கள் தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள்.
நாம் ஒழுக்கமாக இருக்காவிட்டால் ஐரோப்பா பிராந்தியத்தில் ஒரு புதிய அலை ஏற்படும் என்று Hans Kluge கூறினார்.