மகள் மரணம் தொடர்பில் AstraZeneca மீது வழக்குத் தொடுக்கும் இந்திய தம்பதி
Covishield தடுப்பூசி காரணமாக மகள் மரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டு தம்பதி ஒன்று உலகின் மிகப் பெரிய தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மீது வழக்குத் தொடுக்க உள்ளனர்.
வழக்குத் தொடுக்கும் முடிவு
பிரித்தானியா மற்றும் ஸ்வீடன் நிறுவனமான AstraZeneca தங்கள் தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே, அந்த நிறுவனம் மீது வழக்குத் தொடுக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக இந்திய தம்பதி தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் Serum Institute of India என்ற நிறுவனமே, AstraZeneca தடுப்பூசியை Covishield என்ற பெயரில் தயாரித்தனர். மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பரவலாக Covishield தடுப்பூசி பயன்படுத்தப்பட்டது.
ஆனால் தற்போது இந்த விவகாரம் தொடர்பில் Serum நிறுவனம் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. 2021ல் காருண்யா என்ற 20 வயது மகளை இழந்த வேணுகோபாலன் கோவிந்தன் என்பர் தற்போது இந்த விவகாரத்தில் தங்களுக்கு நீதி வேண்டும் என குறிப்பிட்டு நீதிமன்றத்தை நாட இருக்கிறார்.
AstraZeneca நிறுவனத்தின் இந்த ஒப்புதலானது மிக மிக தாமதமாக முன்வைக்கப்பட்டுள்ளது என்றும், ஏற்கனவே இந்த விவகாரத்தில் பலர் இறந்துள்ளார்கள் என்றும் கோவிந்தன் தெரிவித்துள்ளார்.
15 ஐரோப்பிய நாடுகள் AstraZeneca தடுப்பூசியை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், Serum நிறுவனமும் தங்களின் தடுப்பூசி விநியோகத்தை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.
51 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது
தற்போது பல்வேறு நீதிமன்றங்களில் பெற்றோர்கள் பலர் நீதிக்காக போராடி வருகின்றனர் என்றும், ஆனால் விசாரணை இன்னும் முன்னெடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் 8 குடும்பத்தினர் இணைந்து AstraZeneca நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை கோர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், AstraZeneca நிறுவனம் பிரித்தானியாவிலும் வழக்கை எதிர்கொண்டு வருகிறது.
மரணம் உட்பட பல்வேறு தீவிர காரணங்களால் 51 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இருப்பினும் பிரித்தானிய அரசாங்கம் தரப்பில் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |