நடுவானில் விமானியின் முதுகில் ஊர்ந்த உயிரினம்: திகிலை ஏற்படுத்திய சம்பவம்
தென்னாப்பிரிக்காவில் விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென தன் சட்டையில் ஈரம்பட்டதுபோல உணர்ந்திருக்கிறார் விமானி.
தன் தண்ணீர் போத்தல் சரியாக மூடப்படாததால் அதிலிருந்து தண்ணீர் கொட்டியிருக்கலாம் என எண்ணியிருக்கிறார் அவர்.
ஆனால், அது தண்ணீர் அல்ல...
RUDOLPH ERASMUS
முதுகில் ஊர்ந்த உயிரினம்
அந்த விமானியின் பெயர் Rudolph Erasmus. நான்கு பயணிகளுடன், Bloemfontein என்ற இடத்திலிருந்து, Pretoria என்ற இடத்துக்கு விமானத்தை செலுத்திக்கொண்டிருந்திருக்கிறார் அவர்.
சிறிது நேரத்தில், முதுகில் தன் சட்டையின் மீது ஏதோ ஊர்வதுபோல உணர்ந்திருக்கிறார் Rudolph. மெதுவாக திரும்பிப் பார்த்த Rudolphஇன் இதயம் படபடவென அடிக்கத் துவங்கியுள்ளது.
காரணம், கொடிய விஷமுள்ள நாகப்பாம்பு ஒன்று அவரது இருக்கையின் கீழ் சென்று பதுங்குவதைக் கண்டுள்ளார் அவர்.
GETTY IMAGES
புத்திசாலித்தனமான முடிவு
அந்த பாம்பு தன்னைக் கடித்தால் சிறிது நேரத்தில் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்த Rudolph, அதே நேரத்தில், அந்த பாம்பு, பயணிகள் இருக்கும் இடத்துக்குச் சென்றால், அங்கே பெரிய குழப்பம் ஆகிவிடும் என்பதையும் எண்ணிப்பார்த்துள்ளார்.
ஆகவே, பதற்றத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், ’விமானத்துக்குள்ளே ஒரு பாம்பு நுழைந்துள்ளது. ஆகவே, முடிந்தவரை வேகமாக தரையிறங்க முயற்சிப்போம்’ என்று கூறியுள்ளார். பயணிகளின் ரியாக்ஷன்? விமானத்தில், ஊசி விழுந்தால் கூட கேட்கும் என்பார்களே அப்படி ஒரு அமைதி!
உடனடியாக விமானத்தை Welkom என்ற இடத்தில் தரையிறக்கியுள்ளார் Rudolph.
தன்னையும் காத்து, தன் பயணிகள் உயிரையும் காத்த Rudolphஇன் சமயோகிதச் செயலுக்கு பாராட்டு குவிகிறது. ஆனால், அவரோ, தன் பயணிகளும் அமைதி காத்ததால்தான் தன்னால் அந்த பதற்றத்தை உருவாக்கும் சூழ்நிலையை சமாளிக்க முடிந்தது என்கிறார் தாழ்மையுடன்.
விடயம் என்னவென்றால், இன்னும் அந்த பாம்பைக் கண்டுபிடிக்கமுடியவில்லையாம்!