சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல்
சரியான சாப்பாடு கூட இல்லாமல் கிழிந்த உடையுடன் கல்லூரிக்கு சென்றேன் என்று இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் நடராஜன் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
அவர் பேசியது
தமிழக மாவட்டமான விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியின் நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின்னர் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "எனக்கு தெரிந்தது கிரிக்கெட் விளையாடுவது மட்டும் தான். உள்ளூர் போட்டிகளில் விளையாடி கிடைத்த பணத்தை வைத்து தான் கல்லூரியில் பணம் கட்டினேன்.
சில நேரங்களில் சரியான சாப்பாடு கூட இல்லாமல் கிழிந்த உடையுடன் கல்லூரிக்கு சென்றேன். கடினமாக உழைத்து முன்னேறுவதற்கு நானும் ஒரு உதாரணம்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து என்னால் சாதிக்க முடியும் என்றால் உங்களாலும் முடியும். உழைப்பு மட்டுமே முக்கியம். எந்த உயரத்திற்கு சென்றாலும் தன்னடக்கம் முக்கியம்.
நான் எனது சொந்த ஊரில் மைதானம் அமைத்து இலவசமாக கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |