450 பேரை உயிருடன் விழுங்கிய முதலைகள்... ஆனால் அவற்றைக் கொல்ல அனுமதி இல்லையாம்
இந்தோனேசியாவில், முதலைகள் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், அவைகளைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் திணறிவருகிறார்கள்.
450 பேரை உயிருடன் விழுங்கிய முதலைகள்
இதுவரை, சுமார் 450 பேரை முதலைகள் கபளீகரம் செய்துள்ளனவாம். ஆனால், முதலைகள் இந்தோனேசியாவில் பாதுகாக்கப்பட்ட உயிரினம் என்பதால், அவற்றைக் கொல்ல அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை.
மீன் பிடித்துக்கொண்டிருந்த Farjan Idham என்னும் பதின்ம வயதுப் பையனுடைய தலையைத் துண்டித்த கொலைகார முதலைகள், அவனது உடலை வாயில் கவ்வியபடி வலம் வந்தன. பிறகுதான், அவனது துண்டாடப்பட்ட உடலை கிராமத்தினரால் மீட்க முடிந்தது.
Image: ViralPress
26 அடி நீள முதலை ஒன்றைப் பிடித்து, அதன் வயிற்றைக் கிழித்த கிராம மக்கள், அதன் வயிற்றுக்குள் Dimas Saputra என்னும் சிறுவனின் முழு உடலும் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அவனுடைய தந்தையின் கண் முன்னாலேயே அவனை முதலை கவ்விச் செல்ல, அதன் பின்னாலேயே நீந்திச் சென்ற அவனது தந்தையால் தன் மகனைக் காப்பாற்ற முடியவில்லை.
Devi Binti Sulaiman (17) என்னும் இளம்பெண், Sebamban நதியின் அருகே தன் தோழிகளுடன் அமர்ந்திருந்தபோது, வாயில் பற்களே இல்லாத முதலை ஒன்று, தன் தாடையின் பலத்தால் அவளைக் கவ்விச் சென்று விழுங்கியது.
Image: viralpress.com
சட்டத்தை கையில் எடுக்கும் மக்கள்
சட்டப்படி முதலைகளை கொல்லமுடியாது என்றாலும், இதுபோல் அசம்பாவிதங்கள் நடக்கும்போது மக்கள் முதலைகளைக் கொல்வதை அதிகாரிகள் தடுப்பதில்லை.
2018ஆம் ஆண்டு, ஒரு முதலை இந்தோனேசியர் ஒருவரைக் கொல்ல, ஆத்திரமடைந்த மக்கள் பழிக்குப் பழியாக 300 முதலைகளைக் கொன்று குவித்தார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |