இந்தியாவில் Cryptocurrency வருமானங்களுக்கு 30% வரி! கொண்டாடும் முதலீட்டாளர்கள்..
இந்தியாவில் Bitcoin போன்ற Cryptocurrency மூலம் பெறப்படும் வருமானங்களுக்கு 30% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் Cryptocurrency எனும் டிஜிட்டல் கரன்சிகளில் சுமார் 10 கோடி பேர்களுக்கும் மேல் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது ஒரு வணிகத்துறை என்பதால் மொத்தமாக 30% இதன் வருவாய் மீது இந்திய அரசு இன்றைய பட்ஜெட்டில் வரி விதித்துள்ளது.
டிஜிட்டல் டோக்கன்களில் இந்தியா ஒரு பெரிய சந்தையாக மாறி வருகிறது. இதனையடுத்து மெய்நிகர் பண முதலீடு அல்லது கிரிப்டோ முதலீடுகளுக்கு வரி விதிப்பது கட்டாயமாகியுள்ளது.
இதனையடுத்து பட்ஜெட் 2022-23- தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி விதிப்பை அறிவித்தார்.
அதன்படி எந்த ஒரு கிரிப்டோ சொத்துக்களுக்கும் 30% வரி உண்டு. கரன்சியை வாங்குவதற்கான தொகைக்கான கழிவு மட்டுமே கணக்கில் அனுமதிக்கப்படும்.
பரிவர்த்தனையில் ஏற்படும் நட்டங்களை கணக்கில் கொண்டு வர முடியாது. இது தொடர்பான பிரிவு 115BBH என்ன கூறுகிறது எனில், டிஜிட்டல் சொத்துக்கள் மாற்றத்தினை கணக்கில் கொண்டு வரலாம், இதற்கு 30% வருமான வரி உண்டு.
இதற்கான கணக்கீடு தனி, ஒட்டுமொத்த வருமானத்திலிருந்து இந்த டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை வருமானம் கழிக்கப்பட்டு இதற்கு மட்டும் 30% வரி விதிக்கப்படும்.
அதே போல் கிரிப்டோ சொத்துக்கள் (Crypto Assets) பரிமாற்றத்தின் மீதும் ஒரு வரம்பின் கீழ் 1% வரை TDS-ம் விதிக்கப்படும்.
இதன் மூலம் கிரிப்டோ பரிமாற்றங்களை அரசு கூர்ந்து கண்காணிக்க முடியும் என்கிறார், ஷர்துல் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. அமித் சிங்கானியா.
இந்த கிரிப்டோ கரன்சி வரி விதிப்பின் மூலம் மத்திய அரசு கிரிப்டோ கரன்சிக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் அளித்து விட்டதாக இந்தச் சந்தையில் இதனை கொண்டாடி வருகின்றனர்.
இதன் மூலம் மேலும் பலரும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்குள் இறங்கலாம் என்று தெரிகிறது.
இந்த சட்டத்திருத்தம் ஏப்ரல் 1, 2023 முதல் அமுலாகும். கிரிப்டோ கரன்சிக்கு வரி விதிப்பை இந்த துறையைச் சார்ந்தவர்கள் வரவேற்றுள்ளனர்.