ஐரோப்பிய விமான நிலையங்கள் மீது சைபர் தாக்குதல்: விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
ஐரோப்பிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
விமான சேவைகள் பாதிப்பு
லண்டனின் ஹீத்ரோ, பெர்லின் பிரஸ்ஸல்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் முக்கிய விமான நிலையங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.
ஐரோப்பாவின் பல விமான நிலையங்களுக்கு செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளை வழங்கும் கலின்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதலால் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் சிக்கல் காரணமாக விமான பயணிகள் பயண தாமதம் மற்றும் விமான ரத்துகளை சந்தித்து வருகின்றனர்.
ஹீத்ரோ விமான நிலையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பயணிகள் தங்கள் வீட்டை விட்டு புறப்படுவதற்கு முன்பு தங்கள் விமான சேவை நிறுவனங்களை தொடர்பு கொண்டு நிலைமையை சரிபார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஹீத்ரோ விமான நிலையத்தை போலவே பிரஸ்ஸல்ஸ் விமான நிலையமும் இந்த விமான சேவை இடையூறை உறுதிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |