சீன உணவகத்தில் ஏற்பட்ட கோரவிபத்தில் 31 பேர் பலி! இதயத்தை நொறுக்கிய சம்பவம்..ஜி ஜின்பிங் வேதனை
சீனாவில் உணவகம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டதில் 31 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எரிவாயு கசிவு
யின்சுவான் மாகாணம் ஜிங்கிங் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அடுத்த சில நொடிகளில் பெரும் வெடி விபத்து உண்டாகியது. இந்த கோர விபத்தில் 31 பேர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CGTN
உள்ளூர் தீயணைப்பு அதிகாரிகள், 20 வாகனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மறுநாள் அதிகாலை 4 மணி வரை நீடித்ததாக ஊடங்கங்கள் தெரிவிக்கின்றன.
பலியானவர்களில் பலர் டிராகன் திருவிழாவை காண வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் உணவாக உரிமையாளர் உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜி ஜின்பிங் வேதனை
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் 'இதயத்தை நொறுக்கிய சம்பவம்' என்றும் இது ஆழமான பாடமாக அமைந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அழிப்பது மற்றும் விபத்திற்கான காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
AP/PTI
Reuters
THIBAULT CAMUS/AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |