கொடூரமாக தாக்கி காரில் கட்டி இழுத்து செல்லப்பட்ட நபர்... உயிருடன் புதைக்கப்பட்ட கொடூரம்: பகீர் பின்னணி
நியூசிலாந்தில் இளம் விவசாயி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, சுயநினைவற்ற நிலையில், காரில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட பதறவைக்கும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உயிருடன் புதைத்தது அம்பலம்
சக விவசாயி ஒருவரே இந்த கொடுஞ்செயலை முன்னெடுத்துள்ளதுடன், குப்பை கொட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் அந்த நபரை உயிருடன் புதைத்ததும் அம்பலமாகியுள்ளது.
@getty
இந்த அதிரவைக்கும் சம்பவமானது நியூசிலாந்தின் வடக்கு தீவில் அரங்கேறியுள்ளது. வில்லியம் மார்க் கேண்டி என்பவரே தம்முடன் பணியாற்றும் சக விவசாயியை மூர்க்கத்தனமாக தாக்கியவர். 33 வயதான ஜேக்கப் மில்ஸ் ராம்சே என்பவரின் கைகளை சங்கிலியால் பிணைத்து, காரில் கட்டி சுமார் ஒரு கி.மீ தொலைவுக்கு தரதரவென இழுத்து சென்றுள்ளார் மார்க் கேண்டி.
சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பின்னரே ராம்சே உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மார்க் கேண்டி, ஈதன் வெப்ஸ்டர் மற்றும் இன்னொருவர் மீது பொலிசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர்.
மூவரும் குற்றவாளிகள்
கடந்த வாரம் நியூ பிளைமவுத் பகுதியில் அமைந்துள்ள உயர் நீதிமன்றத்தில் ஆஜரான மூவரும் குற்றவாளிகள் என ஒப்புக்கொண்டுள்ளனர். நீதிமன்ற விசாரணையில், மார்க் கேண்டி, ஈதன் வெப்ஸ்டர் ஆகிய இருவரிடமும் ராம்சே குறிப்பிடத்தக்க தொகையை கடனாக பெற்றிருந்துள்ளார்.
@getty
ஆனால் குறித்த காலத்தில் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போயுள்ளது. கொலை நடந்த அன்று ராம்சே உள்ளூர் நகரம் ஒன்றில் தனியாக சிக்கிக்கொள்ள கேண்டி கடனைத் திருப்பிக் கேட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
பின்னர் குற்றுயிராக கிடந்த ராம்சேவை காரில் கட்டி பண்ணை வரையில் இழுத்துச் சென்றுள்ளார்.
அங்கே வெப்ஸ்டர் உட்பட மூவர் சேர்ந்து மீண்டும் சரமாரியாக தாக்கியதுடன், குப்பை கொட்டும் குழியில் உயிருடன் புதைத்துவிட்டு சென்றுள்ளனர்.