புல் அறுக்கச் சென்ற விவசாயியை அடித்துக் கொன்ற புலி: கேரளாவில் நடந்த பயங்கரம்
இந்திய மாநிலம் கேரளாவில் காணாமல் போன பால் பண்ணையாளர் ஒருவர் வனவிலங்கால் தாக்கப்பட்டு, பகுதி தின்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயியை தாக்கியது புலி
குறித்த விவசாயியை தாக்கியது புலி என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர், இருப்பினும் வனத்துறையினர் அதை உறுதிப்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் 36 வயது பிரஜீஷ் எனவும் சுல்தான் பத்தேரி அருகில் வகேரி பகுதியை சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில், சனிக்கிழமை பிற்பகல் கால்நடைகளுக்கு புல் சேகரிக்க வயலுக்கு சென்றுள்ளார் பிரஜீஷ்.
மாலையில் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் அவரை தேடத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், வகேரி பகுதியில் பிரஜீஷின் உடல் பகுதியளவு சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சடலம் காணப்பட்ட பகுதியில்
அவரது இடது கால், தொடை உட்பட, தலையின் ஒரு பகுதியை புலி தாக்கியுள்ளது. உள்ளூர் நபர் தெரிவித்த தகவலில், பிரஜீஷ் தனது கால்நடைகளுக்காக தினமும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து புல் சேகரித்து வந்துள்ளார்.
அதை தமது ஜீப்பில் தங்களது தொழுவத்திற்கு கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சம்பவத்தன்று அவரது சடலம் காணப்பட்ட பகுதியில் அந்த ஜீப்பும் கிடந்துள்ளது. தற்போது உள்ளூர் பொலிசார் மற்றும் வனத்துறையினர் தொடர்புடைய சம்பவம் குறித்து விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |