சிறுவனுக்கு உதட்டில் முத்தமிட்ட தலாய் லாமா! வெளியான சர்ச்சை வீடியோ
திபெத் மதத் தலைவர் தலாய் லாமா சிறுவனுக்கு உதட்டில் முத்தமிடும் வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலாய் லாமா
ஆசிய பிராந்தியமான திபெத்தின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா, இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் தங்கியுள்ளார்.
இவர் பௌத்தர்களிடையே மதிக்கப்படும் நபராகவும், திபெத்தில் சீன ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பின் சின்னமாகவும் உள்ளார்.
சர்ச்சை வீடியோ
இந்த நிலையில் சிறுவன் ஒருவனுக்கு தலாய் லாமா உதட்டில் முத்தம் கொடுக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் சிறுவனுக்கு தலாய் லாமா உதட்டில் முத்தம் கொடுத்ததுடன், தன்னுடைய நாக்கை நீட்டி சிறுவனின் நாக்கால் தன் நாக்கை தொடும்படி கூறுகிறார். இந்த காட்சி இப்போது வெளியாகியுள்ளது கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
So the Dalai Lama is kissing an Indian boy at a Buddhist event and he even tries to touch his tongue.
— Richard (@ricwe123) April 8, 2023
He actually says "suck my tongue"
Now why would he do that?
? pic.twitter.com/TjDizaDHZp
வலுக்கும் கண்டனம்
தலாய் லாமாவின் இந்த செயல் அருவருப்பானது, கேவலமானது, கண்டனக்குரியது என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ இது ஒரு பாரம்பரியம் என்று குறிப்பிடுகிறார்கள்.
தலாய் லாமா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த 2019ஆம் ஆண்டில் அவர், 'கவர்ச்சிகரமானதாக' இருக்க வேண்டும் என்று கூறி ஒரு பெண் தோற்றத்தைப் பற்றி கூறிய கருத்துக்கள் உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பை எழுப்பியது.