கண்களில் இரத்தம் கசியும்... மூன்றில் ஒருபங்கு நோயாளிகள் மரணம்: கதிகலங்கும் ஐரோப்பிய நாடு
கண்களில் இருந்து இரத்தம் வரச் செய்யும் கொடிய வைரஸ், அது தொற்றியவர்களில் 30 சதவீத நோயாளிகள் இறக்க நேரிடும். அவ்வாறான அறிகுறிகளுடன் ஸ்பெயின் நாட்டில் ஒருவர் மருத்துவமனையை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெயினின் வடமேற்கில் உள்ள லியோன் நகரில் ஒருவருக்கு கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த வைரஸ் பொதுவாக உண்ணி கடிப்பதால் மனிதர்களுக்கு பரவுவதாக நிபுணர்கள் தரப்பு கண்டறிந்துள்ளனர்.
இதனிடையே, பெயரிடப்படாத அந்த நோயாளி கடந்த வாரம் லியோனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,, வியாழக்கிழமை பாதுகாப்பு அமைச்சகத்தால் மற்றொரு மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
ஸ்பெயின் அரசு தரப்பு தெரிவிக்கையில், குறித்த தொற்றால் ஆபத்து அதிகம் என்றாலும், தற்போது பாதிக்கப்பட்டுள்ள நபர் ஆபத்து கட்டத்தை கடந்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 30% இதுவரை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல், வலிகள், தலைச்சுற்றல், மனநிலை மாற்றங்கள், குழப்பம் மற்றும் கண்கள் மற்றும் தோலில் ரத்தக்கசிவு உள்ளிட்டவை அறிகுறிகளாக கூறப்படுகிறது.
நோய் தொடர்பில் உறுதி செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்கும் பெரும்பாலான நோயாளிகள் ஆபத்து கட்டத்திற்கு செல்வதாகவும், இதனால் இறப்பு ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
குறித்த வைரஸானது முதன்முதலில் கிரிமியாவில் 1944 இல் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் பால்கன் நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது. வடக்கு ஐரோப்பாவில் இதன் பாதிப்பு அரிதானதாகவே காணப்படுகிறது,
ஸ்பெயினில் 2011 முதல் 3 பேர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் கடந்த மார்ச் மாதம் பெண்மணி ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டது. 2012கு பின்னர் இது நான்காவது நபர் என கூறப்படுகிறது.