ஏழு முறை மரணத்தை ருசி பார்த்த நபர்: லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்
ஏழு முறை சாவின் விளிம்பு வரை சென்று திரும்பிய ஒருவருக்கு லொட்டரியில் 600,000 பவுண்டுகள் பரிசு கிடைத்தால் அவர் என்ன செய்வார்?
ஏழு முறை மரணத்தை ருசி பார்த்த நபர்
குரோவேஷியா நாட்டவரான Frano Selak, இசை பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றியவர்.
1962ஆம் ஆண்டு, அவர் பயணம் செய்துகொண்டிருந்த ரயில், பனி உறைந்த ஆறு ஒன்றிற்குள் பாய்ந்தது. அதில் பயணித்த 17 பேர் உயிரிழந்தார்கள். ஆனால், Selak பிழைத்துக்கொண்டார்.
thesun
1963ஆம் ஆண்டு, ஒரு விமானத்திலிருந்து தூக்கி வீசப்பட்டும், 1966இல் ஒரு பேருந்து விபத்தில் சிக்கியும், 1970இல் தீப்பற்றிய கார்களிலிருந்தும், 1973இல் மற்றொரு பேருந்து விபத்திலிருந்தும், 1966இல், 300 அடி உயர மலையுச்சியிலிருந்து அவரது கார் உருண்டும், இப்படி ஏழு முறை மரணத்தை ருசிபார்த்தும் பிழைத்துக்கொண்டார் Selak.
லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்
இப்படி பலமுறை சாவின் விளிம்புவரை சென்று திரும்பியவருக்கு லொட்டரி மூலம் அதிர்ஷ்டம் அடித்தால் அவர் என்ன செய்வார்? 2005ஆம் ஆண்டு, தனது ஐந்தாவது திருமணத்தைக் கொண்டாடுவதற்காக லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கினார் Selak. அந்த லொட்டரிச்சீட்டில் அவருக்கு 600,000 பவுண்டுகள் பரிசு விழுந்தது.
அவர் என்ன சொன்னார் தெரியுமா? பணத்தால் மகிழ்ச்சியை வாங்கமுடியாது என்றார் அவர்!
ScoopWhoop
ஆக, தனது பணத்தில் பெரும்பான்மையையும், தனது ஆடம்பர வீட்டை விற்று அதில் கிடைத்த பணத்தையும், தன் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் கொடுத்துவிட்டார். அது தனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததாக தெரிவித்தார் அவர்.
தனது இடுப்பெலும்பு மாற்று சிகிச்சைக்காகவும், தன் ஆருயிர் மனைவியுடன் செலவிடுவதற்காகவும், தன்னைக் காத்த கடவுளுக்கொரு ஆலயம் கட்டுவதற்காகவும் மட்டும் கொஞ்சம் பணம் வைத்திருந்துள்ளார் Selak.
என் மனைவி Katarina வந்த நேரம் என் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டுவந்த நேரம் என்று கூறும் Selak, அவள் மட்டுமே போதும், பணம் எதையும் மாற்றிவிடாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |