திமுக அமைச்சர்களின் சொத்தை விற்றாலே தமிழகத்தின் ரூ.8 லட்சம் கோடி கடனை அடைக்கலாம்: ஹெச்.ராஜா
திமுக அமைச்சர்களின் சொத்தை கையகப்படுத்தி விற்றாலே தமிழகத்தின் கடனை அடைத்துவிடலாம் என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பாஜகவின் தேசிய குழு கூட்டம் இன்று துவங்கியது. கட்சியின் தேசிய தலைவர் நட்டா தலைமையில் இரண்டு நாள்கள் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஹெச்.ராஜா பங்கேற்க வந்தார்.
அவர் பேசியது..
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, "மூன்றாவது முறையாக பாஜக தான் ஆட்சி அமையும் என்ற நிலையில் பாஜகவின் தேசிய குழு கூட்டம் துவங்கியுள்ளது. இதனால், பாஜகவினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இன்னும் 60 நாட்களில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி குறித்த சந்தேகங்கள் தீர்ந்து விடும். தினமும் ஒவ்வொரு திமுக மூத்த அமைச்சர்கள் நீதிமன்றத்தில் குட்டு வாங்குகிறார்கள். இல்லையென்றால் அமலாக்கத்துறையிடம் மாட்டிக் கொள்கின்றனர்.
குழந்தை ராமருக்கு ஓய்வு தேவை.., 4 மணிக்கு எழுந்து நீண்ட நேரம் கண்விழித்திருப்பதால் நிர்வாகம் எடுத்த முடிவு
குறிப்பாக, திமுக அமைச்சர்களின் சொத்தை கையகப்படுத்தி விற்றாலே தமிழகத்தின் ரூ.8 லட்சம் கோடி கடனை அடைத்துவிடலாம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |