காதலரின் மனைவியைக் கொலை செய்த நடிகைக்கு சிறை: திரைப்படத்தை மிஞ்சிய சம்பவங்கள்
மொடலும் நடிகையுமான ஒரு பெண்ணை சிலர் தொந்தரவு செய்ய, ஹீரோ போல் வந்து காப்பாற்றினார் ஒருவர்.
தன்னைக் காப்பாற்றியவர் மீது சினிமாவில் வருவது போல் அந்தப் பெண்ணுக்கு காதல் வர, இருவரும் காதலிக்கத் துவங்கினார்கள்.
சினிமாவைப்போலவே அவர்களுடைய முடிவும் அமைந்தது. ஆனால், முடிவு மட்டும் சுபம் அல்ல!
திரைப்படத்தை மிஞ்சிய சம்பவங்கள்
சில திரைப்படங்களில் தலைகாட்டிய இளம்பெண் மொடல், மும்பையைச் சேர்ந்த ஏஞ்சல் குப்தா (26).
தனது மொடல் வாழ்க்கைக்காக டெல்லி வந்த ஏஞ்சலை சிலர் தொந்தரவு செய்ய, அவரை ஹீரோவாக காப்பாற்றினார் மன்ஜீத் சிங் (38).
தன்னை ஹீரோவாக காப்பாற்றிய சிங் மீது ஏஞ்சலுக்கு காதல் வந்தது.
ஆனால், ஹீரோவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகளும் இருந்ததால், என் மகள் வேண்டுமா அல்லது உன் மனைவி வேண்டுமா என நீயே முடிவு செய்துகொள் என்று கூறிவிட்டார் பெரும் தொழிலதிபரான ஏஞ்சலின் தந்தை ராஜீவ்.
காதலிதான் வேண்டும் என சிங் முடிவு செய்ய, அவரது மனைவியான சுனிதாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார்கள் ஏஞ்சலும் சிங்கும்.
அவர்களுக்கு, ஏஞ்சலின் தந்தையின் சாரதியான தீபக் உதவ, அவரது வழிகாட்டலின்பேரில் விஷால் மற்றும் ஷெஸாத் என்னும் இருவர் 10 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு சுனிதாவைக் கொலை செய்ய சம்மதித்தார்கள்.
அதன்படி, Bawana என்னுமிடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார் சுனிதா.
பொலிசார் விசாரணையைத் துவக்க, சுனிதா தனது டைரியில் சிங், ஏஞ்சல் காதல் குறித்த விவரங்களை எழுதிவைத்திருக்க, இருவரையும் பொலிசார் விசாரணைக்குட்படுத்தினார்கள்.
விசாரணையில் கதறி அழுத சிங், ஏஞ்சலுக்காக தான் சுனிதாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அப்படியே திரைப்படக் காட்சிகள் போல் நிகழ்ந்த இந்த சம்பவங்களில், கடைசியில் திரைப்படங்களில் வருவது போலவே குற்றவாளிகள் பொலிசில் சிக்கிக்கொண்டார்கள்.
இந்த சம்பவங்கள் நிகழ்ந்தது, 2018ஆம் ஆண்டு. சமீபத்தில், சிங், ஏஞ்சல், ராஜீவ், தீபக் மற்றும் கொலையாளிகளான விஷால் மற்றும் ஷெஸாத் ஆகிய அனைவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் ஒன்று முடிவு செய்துள்ளது.
காதலர்கள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்வைத் துவக்குவதற்கு பதிலாக சிறை சென்றுள்ளர்கள்.
ஆம், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏஞ்சல், இந்திய தந்தைக்கும் பிரித்தானிய தாய்க்கும் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |