மாதம் மட்டுமே ரூ.2 கோடி நன்கொடை.., அயோத்தி கோயிலுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் பக்தர்கள்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பக்தர்கள் வழங்கும் நன்கொடைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
ராமர் கோயில் திறப்பு விழா
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் ஜனவரி 22 -ம் திகதி நடைபெற உள்ளது. அப்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிறுவ உள்ளார்.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக தங்களால் முடிந்த உதவிகளை கோயிலுக்கு பக்தர்கள் வழங்கி வருகின்றனர். அதன்படி, கிட்டத்தட்ட ரூ.5,000 கோடியை எட்டியுள்ளது. இந்த நிதியானது அறக்கட்டளையின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.
நன்கொடை
ராமர் கோவில் அறக்கட்டளை தினமும் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையில் நன்கொடையை பெறுவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, மாதம் சுமார் ரூ.1.5 முதல் ரூ.2 கோடி வரை நன்கொடையாக பெறுகிறது.
அதிர்ஷ்டமாக மாறும் அயோத்தி ராமர் கோயில்.., படையெடுக்கும் Coca-Cola, Bisleri, Dabur, Parle நிறுவனங்கள்
முன்பு, பக்தர்கள் நன்கொடை அளித்த பணத்தை கையால் எண்ணி வந்தனர். ஆனால், தற்போது நன்கொடை எண்ணிக்கை அதிகரித்ததால் பணத்தை எண்ணும் மெஷின்களை அறக்கட்டளை பயன்படுத்த தொடங்கி உள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஆன்லைன், செக் மற்றும் ரொக்கம் உள்ளிட்ட பல வழிகள் மூலம் பக்தர்களிடம் இருந்து நன்கொடைகளை பெறுகின்றனர். இதை தவிர ராமர் கோவில் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலும் NRI-க்கள் மூலம் நன்கொடைகள் கிடைக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |