உக்ரைனை சமாளிப்பது கடினம்..,ரஷ்யாவை சமாளிப்பது எளிது! டிரம்ப் கருத்து
உக்ரைனை சமாளிப்பது மிகவும் கடினம் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளது.
உக்ரைன் குறித்து டிரம்ப் கருத்து
உக்ரைன்-ரஷ்யா போரில் அமைதி ஏற்படுத்துவது குறித்து பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இதில் உக்ரைனை சமாளிப்பது கடினம் என்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் அமைதியை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
போர் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், உக்ரைன் கிடைக்கும் வாய்ப்பில் வேலையை முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் “அவர்கள் உக்ரைனை தொடர்ந்து தாக்குகிறார்கள். இந்த விஷயத்தில் உக்ரைனை சமாளிப்பது எனக்கு மிகவும் கடினம் இருக்கிறது”.
ரஷ்யாவிடம் அனைத்து வாய்ப்புகளும் உள்ளன, அவர்களிடம் சிறப்பான நிலைமை இருந்த போதிலும், அவர்களை சமாளிப்பது சுலபமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், புடின் அமைதியை விரும்புகிறாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆம்….நான் புடினை நம்புகிறேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |