எனது கோபத்திற்காக மன்னிப்பு கோறுகின்றேன்! வைரலாகும் டிஐஜி விஜயகுமார் ஆடியோ
தமிழ்நாடு மாநிலம், கோவை மாவட்ட சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வைரலாகும் ஆடியோ
இந்நிலையில், இவர் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது, அவர் பேசிய ஆடியோவை திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் அதனை தற்போது பரப்பி வருகின்றனர்.
கடந்த 2011 முதல் 2022 ஆம் ஆண்டு வரை விஜயகுமார் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றினார்.
அப்போது அவர் ஒரு ஆண்டு காலம் பணியாற்றிவிட்டு 2022 ஆம் ஆண்டு பணியிடமாற்றத்தின் காரணமாக வேறு இடத்திற்கு சென்றார்.
அந்த சமயத்தில் அவர் திருவாரூர் மாவட்ட காவல்துறையினருக்கு பேசிய ஆடியோ பரவி வருகிறது
ஆடியோவில் என்ன இருக்கிறது
டிஐஜி விஜயகுமார் பேசிய ஆடியோவில்,என் இனிய திருவாரூர் மாவட்ட காவல்துறை சகோதர, சகோதரிகளே உங்களுடைய வேலையில் கடின உழைப்பு, தியாகத்தை கண்டு மெச்சுகிறேன் .
ஓராண்டு காலம் உங்களோடு பணிபுரிந்ததில் உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. உங்களது வெற்றி எனது வெற்றி ஆகும்.
நீடாமங்கலம் கொலை, இந்து- முஸ்லீம் முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வல பிரச்சனை போன்றவற்றில் மிகவும் ஒற்றுமையுடன் என்னுடன் வேலை செய்தீர்கள்.
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. உங்களது பணியால் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதால் மாவட்ட காவல்துறையில் எனக்கும் நல்ல பெயர் கிடைத்தது.
உங்களது சீரான பணிக்கு நான் தலைவணங்குகிறேன். எனது கோபத்திற்காக உங்களிடம் மன்னிப்பு கோறுகின்றேன். அதனை தவறாக எடுத்துக் கொள்ளாமல் வேலையின் போக்காக எடுத்துக் கொள்ளுங்கள்.
விதி வழி செய்யுமானால் மீண்டும் உங்களை சந்திக்கின்றேன் என அவர் பேசிய ஆடியோவை திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் பரப்பி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |