டிஐஜி விஜயகுமாருக்கு கோவைக்கு வந்ததில் இருந்து தூக்கமில்லை - FIR ரிப்போர்ட்
தமிழ்நாடு, கோவை மாவட்ட டிஐஜி விஜயகுமார் நேற்று காலை துப்பாக்கியை வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
FIRல் இருப்பது என்ன
டிஐஜி விஜயகுமார் தற்கொலையில் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அதிர்ச்சி தரும் தகவல்கள் உள்ளன. தற்கொலை குறித்த தகவல்களை ஆயுதப்படை முதல் நிலைக் காவலர் ரவிச்சந்திரன் பதிவு செய்துள்ளார்.
அதில், பாதுகாவலர் தனது வாக்குமூலத்தில் டிஐஜி விஜயகுமார் காலையில் பால் குடித்துவிட்டு என் அறைக்கு வந்தார். அவர், என்னிடம் தினசரி நிலை அறிக்கை குறித்து கேட்டார். பின்னர், என்னிடம் துப்பாக்கியை எப்படி பயன்படுத்து எனக் கேட்டுக் கொண்டே வெளியில் சென்றார்.
பின்பு, நான் உடை மாற்றி வருவதற்குள் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்த போது தலையில் இருந்து ரத்தம் வழிந்தோடிய நிலையில் கிடந்தார்.
தூக்கம் வருவதில்லை
மேலும் அவர் கோவை சரகத்திற்கு வந்ததில் இருந்து தூக்கம் வருவதில்லை எனவும் கூறியிருக்கிறார். சரியான தூக்கம் வராததால் அதற்கான தூக்க மாத்திரையும் எடுத்துக் கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் உயர்மட்ட அதிகாரிகளிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த இவர் கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். பின்னர் சென்னை அண்ணா நகரில் துணை ஆணையராக இருந்த நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜியாக கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |