இராணுவத்திற்கு இழிவு... தாயாருக்கு எதிராக சாட்சியம்: இளம்வயது சகோதரர்களை அழைத்த ரஷ்யா
ரஷ்ய ராணுவத்தை இழிவுப்படுத்தியதாக கூறி கைது செய்யப்பட்ட தாயார் ஒருவருக்கு எதிராக சாட்சியம் கூற, அவரது இளம்வயது பிள்ளைகளையே நீதிமன்றத்திற்கு இழுத்துள்ளது புடின் நிர்வாகம்.
இரண்டு குழந்தைகள் சாட்சியம்
வடக்கு ரஷ்ய பிராந்தியமான Arkhangelsk இல் Lidia Prudovskaya மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை சாட்சியம் அளிக்கும் வகையில் விசாரணை அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்டனர்.
@afp
செப்டம்பர் 2022ல் உக்ரைனுக்கு எதிரான போர் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டதாக கூறி Lidia Prudovskaya விசாரணையை எதிர்கொண்டிருந்தார்.
பிப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைனுக்குள் துருப்புக்களை அனுப்பிய பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்தின் கீழ் ரஷ்ய இராணுவத்தை இழிவுபடுத்துவது கிரிமினல் குற்றமாகும். குறித்த சட்டத்தை பயன்படுத்தி, புடின் நிர்வாகத்தை விமர்சிக்கும் அனைவரையும் கட்டுப்படுத்தியும் வந்துள்ளனர்.
அனாதை இல்லத்தில் அனுமதி
மட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதம் பாடசாலை மாணவி ஒருவர் போர் எதிர்ப்பு ஓவியம் ஒன்றை வரைந்த நிலையில், ராணுவத்தை இழிவுபடுத்தியதாக கூறி குழந்தையின் தந்தை தண்டிக்கப்பட்டதுடன்.
@afp
பெற்றோருக்கான உரிமைகளை கட்டுப்படுத்தவும் ராணுவம் மனு செய்தது. மேலும், 54 வயதான Alexei Moskalyov சமூக ஊடக கருத்துகளுக்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட, அவரது மகள் மரியா ஒரு அனாதை இல்லத்தில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அந்த 13 வயது சிறுமி, அவரது தாயாருடன் வாழ அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |