நாங்கள் அமைதிக்கு திரும்ப தயார்..ஆனால்: ட்ரம்பின் கெடுவுக்கு ரஷ்யாவின் தடாலடி பதில்
உக்ரைனுக்கு எதிரான மோதலை கைவிட்டு அமைதிக்கு திரும்ப ரஷ்யா தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைதி உடன்படிக்கை
உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் மோதலை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் முயற்சித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் அவர் உக்ரைன் விவகாரத்தில் அமைதி உடன்படிக்கைக்கு ரஷ்யா வரவேண்டும்; இல்லையென்றால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என 50 நாட்கள் கெடு விதித்தார்.
இந்த நிலையில், உக்ரைன் விவகாரத்தில் அமைதி உடன்படிக்கைக்கு வர ரஷ்யா தாயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிமித்ரி பெஸ்கோவ்
அதே சமயம் ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ், ரஷ்யாவின் முக்கிய நோக்கம் அதன் இலக்குகளை அடைவதாகவே இருக்கும் என்றும் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும் அவர், "உக்ரைன் பிரச்சனைக்குக் கூடிய விரைவில் அமைதியான முறையில் தீர்வு காண புடின் விரும்புவதாக பலமுறை கூறிவிட்டார். இது ஒரு நீண்ட நெடிய செயல்முறை. இதற்கு நிறைய முயற்சிகள் தேவை. அதுவும் அவ்வளவு எளிதானது அல்ல.
நாங்கள் அமைதிக்கு திரும்ப தயார்..ஆனால், அதேநேரம் எங்களைப் பொறுத்தவரை எங்கள் இலக்குகளை அடைவதே முக்கியம். எங்கள் இலக்குகள் தெளிவாக உள்ளன" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |