போரில் ரஷ்யா தோற்றால் மேற்கு நாடுகள் அழிந்துவிடும் - எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி
உக்ரைன்-ரஷ்யா போர் பல தசாப்தங்களுக்கு தொடரும் என்றும், ரஷ்யா தோற்றால் மேற்கு நாடுகளும் அழிந்துவிடும் என முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி
ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ், உக்ரைனுக்கு எதிரான இந்தப் போர் பல தசாப்தங்களுக்கு தொடரக்கூடும் என தெரிவித்துள்ளார்.
AP
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'ரஷ்யாவுக்கு இந்தப் போராட்டத்தில் நிலைத்திருப்பதைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் காணவில்லை. போரின் முடிவு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விரும்பத்தகாததாக இருக்கும்.
நாங்கள் அவர்களின் விரோத அரசியல் ஆட்சியை அழிப்போம், இல்லையேல் கூட்டு மேற்கு நாடுகள் ரஷ்யாவை துண்டாக்கி விடும்' என்றார்.
மேலும் அவர், 'ரஷ்யா போரில் தோற்றால், மேற்கு நாடுகளும் அழிந்துவிடும். உக்ரைன் ஒரு பயங்கரவாத சாரம் கொண்ட நாடு' எனவும் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |