திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை - அதிர்ச்சி பின்னணி
தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை
தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 13 ஆவது வார்டு திமுக பெண் கவுன்சிலர் தேவி பிரியா.
இவர், கணவர் அருண்லால் மற்றும் அவருடைய மகள் மோனிகா ஸ்ரீ ஆகிய 3 பேரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர்.
கணவர் அருண்லால் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று காலை கவுன்சிலர் தேவி பிரியாவும், அவரது கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், அவருடைய மகள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பொலிசார் விசாரணை
தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டனர், இது தொடர்பாக ராசிபுரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.
ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலையின் பின்னணி என்ன?
திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ராசிபுரம் டிஎஸ்பி டி.கே.கே.செந்தில்குமார், பொலீஸ் ஆய்வாளர் சுகவனம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திமுக கவுன்சிலர் தேவிப்பிரியாவின் கணவர் அருண்லால் நடத்தி வந்த நகைக்கடை வியாபாரம் கடந்த 6 மாதங்களாக கடும் நஷ்டத்தில் இருந்துள்ளது. இதனால், அவர் அதிக கடனில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.
வியாபாரத்தில் நஷ்டம் அடைந்து கடன் பிரச்னை அதிகமானதால் பொருளாதார நெருக்கடியால் திமுக பெண் கவுன்சிலரின் குடும்பம் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதானல், தனது மகளான மோனிஷாவுக்கு இரவு விஷம் கொடுத்து உறங்க வைத்துவிட்டு கணவனும், மனைவியும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிசார் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.
இறந்த 3 பேரின் உடல்களும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தடயவியல் அறிக்கை வெளியான பின்பு தான் என்ன நடந்தது என்று தெரிய வரும்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |