சிறுவனின் வயிற்றில் இருந்த 100 கிராம் தங்கக்கட்டி - அதிர்ச்சியில் மருத்துவர்கள்
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சுஜோவில், கியான் என்ற குடும்பப்பெயர் கொண்ட 11 வயது சிறுவன் வசித்து வருகிறார்.
வயிற்று வலி
அந்த சிறுவன் திடீரென தனது வயிற்றில் லேசான வீக்கம் ஏற்பட்டுள்ளதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
அவரது பெற்றோர், உடனடியாக அவரை சுஜோ பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனுக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்ததில், சிறுவனின் குடலில் அதிக அடர்த்தி கொண்ட உலோகப் பொருள் சிக்கியிருப்பது தெரியவந்தது.
சிறுவனுக்கு கடுமையான அறிகுறிகள் இல்லாததால், வயிற்றுப்போக்கைத் தூண்டி உலோகப்பொருளை இயற்கையாகவே வெளியேற்றும் முறையை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
ஆனால் 2 நாட்களுக்கு பிறகும், எக்ஸ்ரேவில் அவரது உடலுக்குள் அந்த பொருள் நிலையாக இருப்பது தெரிய வந்தது.
தங்க கட்டி
குடலில் அடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து இருந்ததால், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம், அந்த உலோகத்தை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதன் பின்னர், இரு மருத்துவர்கள் இணைந்து, 30 நிமிடங்கள் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த தங்க கட்டியை அகற்றினர்.
உலோகத்தை வெளியே எடுத்து பார்த்ததில், 100 கிராம் எடையுள்ள தங்க கட்டி இருந்தது தெரிய வந்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு 2 நாட்கள் கழித்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |