வயிற்றில் 47 கிலோ கட்டியுடன் அவதிப்பட்ட பெண்! மருத்துவர்கள் படைத்த சாதனை
இந்தியாவில் குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து 47 கிலோ கிராம் எடை கொண்ட கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
56 வயது மதிக்கத்தக்க அப்பெண் நீண்ட வருடங்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
வயிறு பகுதி மட்டும் பெரிதாகிக்கொண்டே போக, வாயு சம்மந்தப்பட்ட பிரச்சனையாக இருக்கலாம் என கருதியுள்ளார்.
நாளடைவில் இன்னும் பெரிதாக, ஸ்கேன் செய்து பார்த்ததில் கட்டி வளர்வது தெரியவந்தது, ஆயுர்வேதிக் உட்பட பல மருத்துவ முறைகளை பின்பற்றிய போதும் கட்டி வளர்ந்துகொண்டே சென்றது.
சுமார் 18 ஆண்டுகளாக எழுந்து நடக்க முடியாமல், படுக்கை அறையை விட்டே வெளியே செல்ல முடியமால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்யலாம் என முடிவெடுத்த அப்பெண்ணின் குடும்பத்தினர், மருத்துவமரை அணுகிய போது, ஆபத்தான சிகிச்சை என மறுத்துவிட்டாராம்.
மறுபடியும் சந்தித்த போது, வயிற்றில் கட்டி பெரிதாகிக்கொண்டே செல்வதால் உடல் உறுப்புகளின் இருப்பிடங்களும் மாறிவிட்டன, அறுவை சிகிச்சை செய்தால் ஆபத்தில் முடிந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து குடும்பத்தினரின் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர், சுமார் 8 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் வயிற்றிலிருந்த கட்டியை அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
இதனால் அவரது எடை சுமார் 54 கிலோகிராம் குறைந்துள்ளது, தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் நலமாக இருந்ததால் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.