ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுமா?
தொடர்ந்து நேட்டோ அமைப்பை விமர்சித்து வருபவரான ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுமா என்ற கேள்வி பல நாடுகளின் தலைவர்களிடையேயும் காணப்படுகிறது.
அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுமா?
ட்ரம்ப் தொடர்ச்சியாக நேட்டோ அமைப்பை விமர்சித்து வருவதுடன், ஐரோப்பிய நாடுகள், பாதுகாப்புக்கு குறைந்த அளவிலேயே செலவு செய்யும் நிலையில், அமெரிக்கா நேட்டோவின் பட்ஜெட்டுக்கு அளவுக்கு அதிகமாக நிதி ரீதியாக பங்களிப்பைச் செய்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுமா என்ற கேள்வி மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
ஆனால், அமெரிக்கா நேட்டோவை புறக்கணிக்காது என தான் நம்புவதாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலரான John Healey தெரிவித்துள்ளார்.
நேட்டோவுடனான கூட்டணி முக்கியமானது என்பதை அமெரிக்காவுக்குத் தெரியும் என்றும், ஐரோப்பாவுடன் முரண்பாட்டை தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை அமெரிக்கா புரிந்துகொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார் John Healey.
அதே நேரத்தில், ஐரோப்பிய நாடுகள் நேட்டோவுக்கு நிதி வழங்கும் விடயத்தில் இன்னமும் அதிக பங்களிப்பைச் செய்யவேண்டும் என ட்ரம்ப் கூறுவது சரிதான் என்று கூறியுள்ள John Healey, தானும் அதே கருத்து தொடர்பில் விவாதித்துவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |