நீதிமன்றம் செல்லும் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது செய்யப்படுவாரா?
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதை தொடர்ந்து அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் மீதான வழக்கு
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் அதிபர் ஹஷ்-பண விசாரணையில் ”வணிக பதிவுகளை பொய்யாக்கியது” தொடர்பான குற்றச்சாட்டில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
இந்த குற்றப்பத்திரிகையை "அரசியல் துன்புறுத்தல்" என்றும், 2024-ல் ஜனநாயகக் கட்சியினரை அது சேதப்படுத்தும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
டிரம்பின் வழக்கறிஞர்கள் ”முன்னாள் அதிபர் எந்த குற்றமும் செய்யவில்லை. இதை நாங்கள் கடுமையாக எதிர்த்து போராடுவோம்" என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு செல்லும் ட்ரம்பிற்கு அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
"பெர்ப் வாக்" இருக்குமா?
பெர்ப் வாக் என்பது ஒரு குற்றவியல் சந்தேக நபரை பொலிஸ் வளாகத்திலிருந்து கை விலங்கிடப்பட்டு, பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது நடக்கும். ஆனால் டிரம்ப் பொலிஸ் எல்லைக்கு செல்ல மாட்டார்.
@twitter
அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரணடைய ஏற்பாடு செய்துள்ளார், மேலும் ஒரு காவல் நிலையத்தைத் தவிர்த்து நேராக நீதிமன்றத்திற்குச் செல்வார்.
அவர் நீதிமன்றத்திற்குச் செல்வதை யாரும் பார்க்க வாய்ப்பில்லை.
சரணடைந்த பிறகு என்ன நடக்கும்?
கணினிகளுக்கு முன், ஒவ்வொரு கிரிமினல் சந்தேக நபரின் தகவல்களும் நீதிமன்ற அதிகாரிகளால் ஒரு பெரிய புத்தகத்தில் எழுதப்படும்.
@getty
மக் ஷாட் எனப்படும் அவரது புகைப்படத்தை பொலிஸார் எடுக்கலாம். நியூயார்க்கில், இந்த செயல்முறைக்கு பொதுவாக இரண்டு மணிநேரம் ஆகும்.
குற்றத்தை ஒப்புக் கொண்டால்
இதில் குற்றப்பத்திரிகையிலுள்ள குற்றச்சாட்டுகள் உரக்க வாசிக்கப்படும். அவர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்கிறாரா? என்று ட்ரம்பிடம் கேட்கப்படும்.
மேலும் அவர் "குற்றவாளி" அல்லது "குற்றவாளி அல்ல" என்று பதிலளிக்க வாய்ப்பளிக்கப்படும்.
டிரம்பின் வழக்கறிஞர்களான ஜோ டகோபினா, சூசன் நெசெல்ஸ் மற்றும் டோட் பிளாஞ்ச் ஆகியோர் நீதிபதி மற்றும் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்து அடுத்த முறை அவர் மீண்டும் நீதிமன்றத்தில் வருவதற்கான தேதியை நிர்ணயிப்பார்கள்.
அவர் கைது செய்யப்படுவாரா?
தொழில்நுட்ப ரீதியாக, ஆம் கைது செய்யப்படலாம். ஆனால் அது திரைப்படங்களில் பார்ப்பது போல் இருக்காது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி என்பதால் அவரை பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்வார்கள்.
@afp
நீதி மன்றத்தின் வெளியே என்ன நடக்கும்?
செவ்வாயன்று லோயர் மன்ஹாட்டனில் உள்ள 100 சென்டர் செயின்ட் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை, நீதிமன்ற அதிகாரிகள் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.
@afp
பிளாசாவைச் சுற்றியுள்ள சில தெருக்களை போலீசார் மூடுவார்கள் என்றும், பாதுகாப்பு பலமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நியூயார்க் காவல் துறை நகரின் பாதுகாப்புப் பொறுப்பில் உள்ளது, ஆனால் மாநில நீதிமன்ற அதிகாரிகள் நீதிமன்றத்திற்குள் பாதுகாப்புப் பொறுப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது