தங்கத்தை விட தோசை விலை அதிகம்: ரூ.600க்கு விற்கப்படும் தோசை: மும்பை விமான நிலைய பயணிகள் திகைப்பு
மும்பை விமான நிலையத்தில் வெள்ளிக்கு நிகரான விலையில் தோசை விற்கப்படுவதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
ஒரு தோசையின் விலை
600 ரூபாய் சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் விற்கப்படும் மசாலா தோசையின் பெரும் விலை குறித்து சமூக ஊடகங்களில் வீடீயோ ஒன்று வைரலானது.
பொதுவாகவே விமான நிலையங்களில் விற்கப்படும் உணவுகளின் விலை சற்று அதிகமாக தான் இருக்கும், ஆனால் ஒரு சாதாரண தோசை 600 ரூபாய் என்பதை வழக்கமான பயணிகளால் கூட ஜீரணிக்க முடியவில்லை இது தொடர்பாக வெளியான சிறிய வீடியோ ஒன்றில், உணவுப்பட்டியலின் டிஜிட்டல் விலை பட்டியல் காட்டப்படுகிறது.
அதில் மசாலா தோசையின் விலை 600 ரூபாய் என்றும், பட்டர் தோசையின் விலை 620 ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனுடன் காபி அல்லது லஸ்ஸி போன்ற பானங்கள் வேண்டும் என்றால் அதன் விலை இன்னும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதாரண தோசையில் மிகவும் வறண்ட மசாலாவை மட்டும் வைத்து வழங்கப்படும் காட்சிகள் இணையத்தில் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பார்க்கப்பட்டு வருகிறது.
இணையவாசிகள் பிரமிப்பு
இதற்கிடையில் 600 ரூபாய்க்கு விற்கப்படும் தோசை ரூபாய் 40 மற்றும் 50 ரூபாய் மதிப்புள்ள தோசையின் மதிப்பில் கூட இல்லை என பயனர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
என்ன தான் சுத்தம், தரம் என்று கூறினாலும் தோசை 600 ரூபாய் என்பது மிக மிக அதிகம் என இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒருவர் தோசையின் விலையை ஒப்பிடும் போது விமான நிலையத்தில் தங்கத்தின் விலை குறைவாக கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பலர் தோசையின் விலையில் வெள்ளியின் விலைக்கு நிகராக இருப்பதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
most expansive dosa,Mumbai airport,Gold is cheaper than dosa