ரகசிய செயலியை ஹேக் செய்த FBI: பல நாடுகளால் தேடப்பட்டு வந்த கடத்தல் மன்னன் கைது
அமெரிக்கா உட்பட பல நாடுகளால் தேடப்பட்டு வந்த போதை பொருள் கடத்தல்காரனை துருக்கி பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
கடத்தல் மன்னன் கைது
துருக்கியில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து சென்ற பெற்றோர்களுக்கு பிறந்தவர் ஹக்கன் அயிக்.
இவர் ஹவாலா பண மோசடி, போதைப் பொருள் கடத்தல், கொலை என பல்வேறு குற்ற வழக்கில் அமெரிக்கா உள்பட பல்வேறு நாட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.
Turkish Minister of International Affairs
இந்நிலையில் போதைப் பொருள் கடத்தல் மன்னனை துருக்கி நாட்டு பொலிஸார் அதிரடியாக மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
வலை விரித்த FBI
2010ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இருந்து தப்பிச் சென்ற ஹக்கன் அயிக், துருக்கில் இருந்து கொண்டே பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உலகளாவிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்தி வந்த ரகசிய சாட் செயலியை FBI அதிகாரிகள் ஹேக் செய்தனர்.
Turkish Minister of International Affairs
இதன் மூலம் போதைப் பொருள் கடத்தல் மன்னன் அயிக் இருப்பிடத்தை கண்டுபிடித்த FBI அதிகாரிகள், துருக்கி பொலிஸாருக்கு தகவல் அளித்து ஹக்கன் அயிக்கை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |