கார் நம்பர் பிளேட்டை 480 கோடிக்கு வாங்கிய கோடீஸ்வரர்! துபாயில் சாதனை படைத்த ஏலம்
வாகன நம்பர் பிளேட்டிற்காக கோடிக்கணக்கில் செலவு செய்வதை பார்த்திருக்கிறீர்களா? உண்மையில், விஐபி கார் நம்பர் பிளேட்டுகளுக்காக ஒருவர் 55 மில்லியன் திர்ஹம் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 480 கோடி) செலவு செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இதுவரை உலகிலேயே அதிக விலை கொண்ட நம்பர் பிளேட் இதுதான் என கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது.
55 மில்லியன் திர்ஹம்களுக்கு விற்பனை- புதிய சாதனை
'P7' எனும் விஐபி கார் நம்பர் பிளேட் '‘Most Noble Numbers' அறக்கட்டளை ஏலத்தில் 55 மில்லியன் திர்ஹம்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
2008-ஆம் ஆண்டு அபுதாபியிலிருந்து ஒரு கார் நம்பர் பிளேட் 52.2 மில்லியன் திர்ஹம்களுக்கு (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.455 கோடி) விற்கப்பட்ட சாதனையை, இந்த ஏலத்தில் ஈடுபட்டவர்கள் முறியடித்துள்ளார்.
Twitter:IANS
இந்த P7 நம்பர் பிளேட்டுக்கான ஏலம் 15 மில்லியன் திர்ஹாம்களில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்தது. இதற்கு முன்னரும் இது போன்ற நிகழ்ச்சிகள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பணக்காரர்கள் தங்கள் அந்தஸ்தையும் செல்வத்தையும் காட்ட இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள். முன்னதாக 2008-ஆம் ஆண்டு உள்ளூர் தொழிலதிபர் Saeed Abdul Ghaffar Khouri 52.2 மில்லியன் திர்ஹம்களுக்கு விஐபி கார் நம்பர் பிளேட்டை வாங்கினார். அப்படிப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இந்த சாதனை முறியடிக்கப்பட்டது.
A guy in Dubai casually spending $15m to buy a unique license plate.
— ????? ?? (@RomeoTrades) April 9, 2023
There is rich, and there is Dubai rich. pic.twitter.com/wJ7ed36TFt
பெயரை வெளியிடவில்லை
இந்த நம்பர் பிளேட்டை அதிக தொகைக்கு வாங்கியவர், தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பல விஐபி நம்பர் பிளேட்டுகள் மற்றும் தொலைபேசி எண்கள் ஏலம் விடப்பட்டது.
பணக்காரர்கள் தங்கள் செல்வத்தைக் காட்டவும், வரி இல்லாத வாழ்க்கையை வாழவும் துபாய் எப்போதும் சிறந்த இடமாக இருந்து வருகிறது. உலகின் பிற பகுதிகளில் பொருளாதார சந்தையின் தாக்கம் இருந்தாலும், அது துபாயில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
The Most Noble Number charity auction in Dubai, has raised AED 97.920 million that will go towards supporting #1BillionMeals endowment.The world’s most expensive vehicle plate number (P7) was sold during the auction for AED 55 million.@dutweets https://t.co/gIIGAJlv1g pic.twitter.com/SeQI52JkV1
— مبادرات محمد بن راشد آل مكتوم العالمية (@MBRInitiatives) April 9, 2023
ஏலத்தில் வந்த பணம்
ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் '1 Billion Meals Endowment' பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படும். இந்த பிரச்சாரத்தின் குறிக்கோள் ரமலானுக்கான உணவு நிதியை உருவாக்குவதாகும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் (Sheikh Mohammed bin Rashid Al Maktoum), உலகளாவிய பட்டினியை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை மேம்படுத்துவதற்காக இந்த பிரச்சாரத்தை தொடங்கினார்.