துபாய் சாலையில் பைக் வீலீ செய்த இளைஞருக்கு 11 லட்சம் அபராதம்
துபாயில் பரபரப்பான சாலையில் பைக் வீலீ செய்த இளைஞருக்கு 50,000 திர்ஹம் (இந்திய பணமதிப்பில் ரூ. 11.23 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது.
துபாயில் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் பைக் ஓட்டி பயிற்சி செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்தனர். அவருக்கு 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் மற்றும் 23 கரும்புள்ளிகள் அவரது உரிமத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் துபாய் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த இளைஞர் பரபரப்பான சாலையில் ஒற்றை சக்கரத்தில் (வீலீ) பைக்கை ஓட்டி பயிற்சி செய்து கொண்டிருந்தார். இந்த ஸ்டண்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த காட்சிகளை ஆய்வு செய்து பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
#DubaiPolice apprehends a reckless motorcyclist pic.twitter.com/dFzhqBCH2z
— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) August 25, 2023
கடந்த ஏழு மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறிய 22,115 பைக்கர்களுக்கு எதிராக துபாய் எமிரேட்டில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொதுத் துறை மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழக்குகளில் 858 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் பயிற்சி செய்யும் பைக் ஓட்டுபவர்களுக்கு எதிராக 901 துபாய் காவல்துறையின் ஸ்மார்ட் ஆப்பில் புகார் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் இயக்குநர் ஜெனரல் கேட்டுக் கொண்டார். போக்குவரத்து விதிகளை கடுமையாக்குவதன் ஒரு பகுதியாக, சோதனை மற்றும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Dubai Police
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Dubai Police, Dubai traffic Rules, UAE traffic rules, Dubai traffic police, UAE, Dirhams, United Arab Emirates Dirham, Penalty, Bike Stunt, bike Wheelie