துபாயில் விரைவில் அறிமுகமாகும் பறக்கும் டேக்ஸிகள்: சிறப்பம்சங்கள், பயண விவரங்கள் என்னென்ன?
துபாயில் விரைவில் பறக்கும் டேக்ஸி சேவைகள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பறக்கும் டாக்ஸிகள்
துபாயில் புதிய தொழில்நுட்பங்களுடன் விரைவில் பறக்கும் டேக்ஸி சேவைகள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்காத மாசற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட கவர்ச்சியூட்டும் இந்த பயண சேவையை விரைவாக கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
2026 ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த பறக்கும் டேக்ஸிகள் திட்டத்தை செயல்படுத்த லண்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்றும் ஒப்பந்தம் ஆகியுள்ளது.
தரையில், நீரில் மற்றும் பிற பிரத்யேக இடங்களில் இருந்து இந்த பறக்கும் டேக்ஸிகள் வானில் எழும்ப வெர்டிபோர்ட்ஸ் என்ற வசதியை கட்டமைத்து வருகின்றனர், மேலும் இந்த பறக்கும் டாக்ஸிகள் eVTOL என்று அழைக்கப்படுகிறது.
எத்தனை பேர் வரை பயணிக்கலாம்
இந்த மின்சாரத்தால் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும் இந்த பறக்கும் டாக்ஸிகள் மூலம் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் 241 கி.மீ வரை பயணிக்க முடியும். மேலும் இதில் பைலட் உள்பட 4 பயணிகள் வரை பயணம் செய்யலாம்.
இந்த பறக்கும் டேக்ஸிகளின் தலைமையகம் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகில் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக இந்த பறக்கும் டேக்ஸிகள் துபாயின் விமான நிலையம், பால்ம் ஜுமைரா, டவுன் டவுன், மரினா ஆகிய பகுதிகளுக்கு மட்டும் இயக்கப்படும், பின் பறக்கும் டாக்ஸி சேவை பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பறக்கும் டேக்ஸிகள் மூலம் 45 நிமிடங்கள் வரை ஆகும் துபாய் விமான நிலையத்தில் இருந்து பால்ம் ஜுமைராவிற்கான பயணம் வெறும் 6 நிமிடங்களில் சென்றடைய முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |