கொட்டித் தீர்த்த கனமழை - துபாய் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நிலையற்ற வானிலை காரணமாக துபாய் காவல்துறை பொது பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
துபாய் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
"தயவுசெய்து கடற்கரைகளில் இருந்து விலகி இருங்கள், படகில் செல்ல வேண்டாம், பள்ளத்தாக்கு பகுதிகள், கனமழை மற்றும் தாழ்வான இடங்களைத் தவிர்க்கவும், வாகனங்களை ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என துபாய் காவல்துறையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு நிறுவனங்கள் கூறியுள்ளன.
துபாய் விமான நிலையமும் சீரற்ற வானிலை தொடர்பாக பயணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே தொடங்குமாறும், அவர்கள் காரிலோ அல்லது பொதுப் போக்குவரத்திலோ பயணித்தாலும் சரியான நேரத்தில் விமான நிலையத்தை அடைய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 16 அன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரலாறு காணாத மழை பெய்தது. இது வளைகுடா நாட்டின் சில பகுதிகளை ஸ்தம்பிக்க வைத்து, துபாய் மற்றும் வடக்கு நகரங்கள் உட்பட சில சுற்றுப்புறங்களில் அதிக வெள்ளத்தையும் ஏற்படுத்தியது.
75 ஆண்டுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனுபவித்த மிகக் கடுமையான மழையாக இந்த ஆண்டு பெய்ய்பட்ட மழை கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |