துபாயின் ஆட்சியாளரின் மகள் Instagram-ல் விவாகரத்து!
துபாய் இளவரசி எடுத்த முடிவு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயின் ஆட்சியாளரின் மகளான ஷைக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம் (Shaikha Mahra Bint Mohammed Bin Rashid Al Maktoum) தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராமில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இந்த தம்பதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு முதல் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், சமூக ஊடகங்கள் மூலம் அறிவிக்க இளவரசி எடுத்த முடிவு விவாதப் பொருளாக மாறியது.
அவர் தனது இன்ஸ்டா பதிவில், “அன்புள்ள கணவரே.. நீங்கள் மற்றவர்களின் சகவாசத்தை விரும்புவதால் உங்களை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளேன்.
நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்.. நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்.. நான் உன்னை விவாகரத்து செய்கிறேன். டேக் கேர்.. இப்படிக்கு-உங்கள் முன்னாள் மனைவி" என முத்தலாக்கை இவ்வரசு கூறி கூறி பதிவிட்டுள்ளார்.
துபாய் இளவரசியின் இந்தப் பதிவு மிக விரைவில் வைரலானது.
ஷேக் மனாபின் மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு குழந்தை பிறந்தது.
ஷேக்கா மஹ்ரா துபாய் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகள் ஆவார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Dubai Princess divorce Husband In Insta Post, Dubai Princess Shaikha Mahra, Shaikha Mahra divorce