மதுபானங்கள் மீதான வரி 30% குறைப்பு: முக்கிய வளைகுடா நாடு எடுத்துள்ள முடிவு
சுற்றுலா துறையை மேம்படுத்தும் முயற்சியில் துபாய் 30% மது வரியை ரத்து செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மது மீதான வரி குறைப்பு
பணக்கார வளைகுடாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையே போட்டி அதிகரித்து வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முக்கிய நகரமான துபாய் மதுபானங்கள் மீதான 30 சதவிகித வரியை குறைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
முஸ்லிம் நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாய் நிதி, வர்த்தக மற்றும் சுற்றுலா மையமாகும், அத்துடன் முக்கிய எண்ணெய் ஏற்றுமதியாளரான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்போது படிப்படியாக குடிப்பழக்கத்தின் கட்டுகளை தளர்த்தி வருகிறது.
இந்த வரி குறைப்பு அறிவிப்பானது விநியோகஸ்தர்களால் அறிவிக்கப்பட்டு இருப்பினும், அரசாங்க அதிகாரிகளால் இன்னும் வரி குறைப்பு உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த வரி குறைப்பின் மூலம் உலகின் மிக உயர்ந்த மதுபானங்களும் குறைவான விலையில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது, பைண்ட் அல்லது அரை லிட்டர் பீர் வழக்கமாக $15 செலவாகும்.
வரி குறைப்பு தொடர்பாக MMI பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில் "உங்களுக்குப் பிடித்த பானங்களை வாங்குவது எளிதாகவும் மலிவாகவும் உள்ளது!" என்று தெரிவித்துள்ளது.
மேலும் 21 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கிடைக்கும் தனிப்பட்ட மதுபான உரிமம், துபாயின் சிறிய எண்ணிக்கையிலான உரிமம் பெற்ற கடைகளில் மதுபானம் வாங்குவதற்கு தேவையானது, ஆனால் தற்போது அது சுதந்திரமானது என MMI தெரிவித்துள்ளது.