நூற்றுக்கணக்கான பயணிகளை வெளியேற்றிய விமான நிலையம்: ஐரோப்பிய நாடொன்றில்..என்ன நடந்தது?
அயர்லாந்தில் பாதுகாப்பு எச்சரிக்கையை அடுத்து டப்ளின் விமான நிலையம், அதன் முனையங்களில் ஒன்றில் இருந்து பயணிகளை வெளியேற்றியது.
டப்ளின் விமான நிலையத்தில் திடீர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக 'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக' ஏராளமான மக்கள் விமான நிலையத்தின் முனையம் 2 கட்டிடத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனாலும் இதற்கு பின்னால் உள்ள காரணம் குறித்து தெளிவாக தெரியவில்லை. இதுகுறித்து தி ஐரிஷ் இண்டிபென்டன்ட் ஊடகம் வெளியிட்ட செய்தியில், தேவைப்பட்டால் வெடிகுண்டு அகற்றும் படையை விமான நிலையத்திற்கு அனுப்புமாறு அயர்லாந்தின் பாதுகாப்புப் படைகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் டப்ளின் விமான நிலையம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், 'பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை. விமான நிலையத்தில் உள்ள எவரும் ஒன்றுகூடும் இடங்களுக்கு ஊழியர்களைப் பின்தொடர வேண்டும். விமான நடவடிக்கைகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம்' என தெரிவித்துள்ளது.
டப்ளினில் நடந்த இந்த சம்பவம், பல முக்கிய ஐரோப்பிய விமான நிலையங்களில் Check-in மற்றும் Boarding அமைப்புகளை சைபர் தாக்குதல் பாதித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு நடந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |