எகிறும் எரிசக்தி கட்டணங்களால் திணறல்: 3.1 பில்லியன் யூரோ நிவாரணம் அறிவித்த அரசு
நாட்டில் உள்ள 10,000 சிறு வணிகங்கள் பயன்பெறும் என பொருளாதார விவகார அமைச்சர்
விலைவாசி உயர்வால் தத்தளிக்கும் மக்களுக்கு ஆதரவாக 18 பில்லியன் யூரோ - நெதர்லாந்து அரசாங்கம்
எரிசக்தி கட்டணங்கள் அதிகரிப்பால் திணறும் சிறு வணிகங்களை காப்பாற்ற நெதர்லாந்து அரசு 3.1 பில்லியன் யூரோ தொகையை செலவிட திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த திட்டத்தால் நாட்டில் உள்ள 10,000 சிறு வணிகங்கள் பயன்பெறும் என பொருளாதார விவகார அமைச்சர் மிக்கி அட்ரியான்சென்ஸ் தெரிவித்துள்ளார்.
@reuters
நெதர்லாந்தில் எரிசக்தி கட்டண உயர்வை எதிகொள்ளும் பொருட்டு வாடிக்கையாளர்களுக்கு உதவ அரசாங்கம் 23.5 பில்லியன் யூரோ செலவிட இருப்பதாக கடந்த 4ம் திகதி அறிவித்திருந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றது.
மட்டுமின்றி, ஏற்கனவே விலைவாசி உயர்வால் தத்தளிக்கும் மக்களுக்கு ஆதரவாக 18 பில்லியன் யூரோ செலவிட இருப்பதாக நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்திருந்தது.
@getty
முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் எரிவாயு விலை வரம்பை எதிர்ப்பதில் ஜேர்மனியுடன் நெதர்லாந்து அரசாங்கமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் தான் கடுமையான எரிசக்தி நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் அவதிக்கு உள்ளாகும் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு உதவ சுமார் 65 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான நிவாரணத் திட்டத்திற்கு ஜேர்மன் சேன்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் கூட்டணி அரசு ஒப்புக்கொண்டது நினைவுக்கூரத்தக்கது.