ஜப்பானை 6.1 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கம்!
ஆசிய நடானான ஜப்பானை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
நிலநடுக்கத்தின் கோர தாண்டவம்
சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இதுவரை 47,000 பேர் நிலநடுக்கங்களினால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் தங்கள் உறவினர், வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். ஜப்பானையும் தாக்கிய நிலநடுக்கம் இந்த நிலையில் ஆசிய நாடான ஜப்பானை நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் 60 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், வடகிழக்கு ஜப்பான் மற்றும் கிழக்கு ஜப்பான் உள்ளிட்ட பரந்த பகுதிகளை உலுக்கியது.
ஜப்பானின் செய்தி நிறுவனமான கியோடோ நியூஸ், வானிலை ஆய்வு மையத்தை மேற்கோள்காட்டி ஹொக்கைடோ தீவை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
உயிர்சேதம் இல்லை
மேலும் ஹொக்கைடோவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எதுவும் ஏற்படவில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதில் உயிர் சேதமோ அல்லது பெரிய சொத்து சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
@Shutterstock/Representative
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, இந்தோனேசியாவின் ஹல்மஹேராவின் வடக்கில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.