ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கடலில் மூழ்கிய 60 ஆண்டுகால அருங்காட்சியகம்: வீடியோ
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள அருங்காட்சியகம் கடலில் இடிந்து விழுந்துள்ளது.
ஈக்வடாரில் நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள பாலோன் நகரில் 6.8 என்ற ரிக்டர் அளவுகோலிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
Reuters
மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மீட்புக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடலில் இடிந்து விழுந்த அருங்காட்சியகம்
ஈக்வடாரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் எல் ஓரோ மாகாணத்தின் கடலோரப் பகுதியில் செயல்பட்டு வந்த புவேர்ட்டோ பொலிவர் மரைன் மியூசியம் கடலில் இடிந்து விழுந்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கிட்டத்தட்ட முழு அருங்காட்சியகமும் நீரில் மூழ்கியுள்ளது.
The Puerto Bolívar Parish Museum, El Pro, collapses due to the 6.5 magnitude earthquake in #Balao, #Guayas.#Ecuador pic.twitter.com/DZQyeRGYAf
— Wᵒˡᵛᵉʳᶤᶰᵉ Uᵖᵈᵃᵗᵉˢ? (@W0lverineupdate) March 18, 2023
இதையடுத்து அதிலிருந்த கலைப் பொருட்களை உள்ளூர் மக்கள் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.
இதில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரித்து வைக்கப்பட்டு இருந்த 5000 கடல் கலைப் பொருட்கள் இருந்ததாக தகவல் தெரியவந்துள்ளது.