தேர்தலுக்கு சில தினங்கள்... மக்கள் மத்தியில் ஜனாதிபதி வேட்பாளர் படுகொலை: பதற்றத்தில் நாடு
தென்னமெரிக்க நாடான ஈக்வடாரில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஃபெர்ணான்டோ வில்லவிசென்சியோ, பரப்புரை ஊர்வலத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலையில் மூன்று முறை சுட்டதாக
Quito பகுதியில் பரப்புரையை முடித்துக் கொண்டு அவர் காரில் ஏற முற்பட்டபோது ஒருவர் அருகில் வந்து தலையில் மூன்று முறை சுட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
@getty
வன்முறை மற்றும் குற்றச்செயல்களை குறிப்பிட்டு தேர்தல் பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், முக்கிய ஜனாதிபதி வேட்பாளரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது ஃபெர்ணான்டோ வில்லவிசென்சியோ ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் என அனைவரும் அவரது காருக்கு அருகாமையில் காத்திருந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும், மக்கள் அலறியதாகவும் கூறப்படுகிறது. வெளியான தகவல் தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாட்டின் ஜனாதிபதி Guillermo Lasso தெரிவித்துள்ளார்.
அந்த நபர் கொல்லப்பட்டுள்ளதாக
இதனிடையே, சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையின் போது, துப்பாக்கி குண்டு காயங்களால் அந்த நபர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@reuters
மிகச் சிறிய தென் அமெரிக்க நாட்டில் வன்முறைக் குற்றங்கள் அதிர்ச்சிகரமான எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதன் மத்தியில் இந்தப் படுகொலை நடந்துள்ளது.
ஈக்வடாரில் எதிர்வரும் 20ம் திகதி ஜனாதிபதி தேர்தல் முன்னெடுக்கப்படுகிறது. மொத்தமுள்ள 8 வேட்பாளர்களில் ஃபெர்ணான்டோ வில்லவிசென்சியோவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |