சட்டவிரோதமாக பணத்தை கையாண்ட பிரபல இந்திய தொழிலதிபர்.., பல கோடி சொத்துக்களை முடக்கிய ED
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனரும், தலைவருமான பவன் முன்ஜாலினுடைய ரூ.24.95 கோடி மதிப்புள்ள மூன்று சொத்துக்களை அமலாக்க துறை முடங்கியுள்ளது.
சட்டவிரோதமாக பணம்
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக அந்நிய செலாவணி நாணயத்தை எடுத்துச் சென்றதற்காக பவன் முன்ஜால் மற்றும் இன்னும் சிலருக்கு எதிராக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் புகார் ஒன்றை தாக்கல் செய்தது.
அதனடிப்படையில் அமலாக்க துறை இயக்குனரகம் விசாரணையை தொடங்கியது. அதன்படி, அமலாக்க இயக்குனரகம் வெளியிட்ட அறிக்கையில்,"இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக அந்நிய செலாவணிக்கு சமமான ரூ. 54 கோடி பணத்தை வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிற நபர்களின் பெயரில் அந்நியச் செலாவணியை வெளியிட்ட பின்னர், அதனை தனது வெளிநாட்டில் தனது தனிப்பட்ட செலவினங்களுக்காக பயன்படுத்தியுள்ளார் " என்று கூறப்பட்டுள்ளது.
சொத்துக்கள் முடக்கம்
மேலும், "அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடமிருந்து வெளிநாட்டு நாணயமானது பல்வேறு ஊழியர்களின் பெயரில் நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தால் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, பவன் காந்த் முன்ஜாலின் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த வெளிநாட்டு நாணயத்தினை, பவன் காந்த் முன்ஜாலிலின் தனிப்பட்ட செலவுக்காக மேலாளர் ரகசியமாக எடுத்துச் சென்றுள்ளார். அதாவது, தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 2.5 லட்சம் அமெரிக்க டொலர் வரம்புகளை மீறும் முறை பின்பற்றப்பட்டது.
இதனால் பவன் முன்ஜாலினுடைய ரூ.24.95 கோடி மதிப்புள்ள மூன்று சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |