அவுஸ்திரேலியாவில் பாராட்டுப் பெற்ற ஈழத்தமிழர்! யார் அவர்?
அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழரான அக்சயன் மணிவண்ணன், சைவப் பாடல்களையும் அதற்கான பொருளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதற்கான விளக்கங்களை கொடுத்து நூலாக வெளியிட்டுள்ளார்.
அண்மையில் மெல்போர்னில் தமிழ் சைவ கவிதைகளின் வெளியீட்டை அக்சயன் மணிவண்ணன் நடத்தினார். இதில் 300க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்குபெற்றனர்.
இந்த நூல் வெளியீட்டில் பேசியது குறித்து விளக்கிய அக்சயன், இந்த ஆர்வம் திருப்புகழை வாசித்தபோதுதான் வந்தது என தெரிவித்தார்.
தமிழை எப்படி உங்கள் வசப்படுத்திக் கொண்டீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "நல்ல உரைகளை வாசித்து, சொற்பொழிவுகளைக் கேட்டு, தமிழ்மொழியின் நடையை உள்வாங்கி, மெது மெதுவாகத்தான் என்வசப்படுத்திக் கொண்டேன்" என்றார்.
தங்கள் வீட்டில் இயல்பாக தமிழ் மொழியை பேசுவதாகவும், ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து உரையாடும் முயற்சியை தொடங்கியிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
அந்த விடயம் கடினமாக இருந்தாலும், சிரமங்கள் இருந்தாலும் பல தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொண்டு உள்வாங்கி பயணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |