சக்கரை நோயாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மைதா! இந்த தவறை மட்டும் செய்யாதீங்க
பொதுவாக நாம் தினச்சரி எடுத்துக் கொள்ளும் மைதா கலந்த உணவுகளால் உடலில் நச்சு தன்மை அதிகரிக்கிறது.
மைதா என்பது கோதுமையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு இரசாயனப்பொருட்கள் கலந்து வெண்மை நிறமாக்கப்பட்ட ஒரு வகை பவுடர்.
இதனை பயன்படுத்தி நூடில்ஸ்,ரொட்டி, இடியப்பம் ,தோசை போன்ற உணவுகள் தயாரிக்கப்படுகிறது. ஆனால் அவை மனித உடலுக்குள் சென்று தேவையற்ற நோய் நிலைமைகளை உருவாக்கிறது.
இதனால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த மைதாவை தடைச் செய்துள்ளனர்.
அந்த வகையில் மைதா கலந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
உடலில் தோன்றும் நோய்கள்
இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்
மைதாவில் கிளைசெமிக் இன்டெஸ் என்ற பதார்த்தம் அதிகம் இருப்பதால் உடலில் இருக்கும் சக்கரையின் அளவை அதிகப்படுத்துகிறது.
இதனால் நீரழிவு நோயாளர்கள் அதிகமாவார்கள். மேலும் இது தொடர்பான ஆராய்ச்சிகள் செய்ததில் 90 சதவீதம் உறுதியாகியுள்ளது.
உடல் பருமன் அதிகரிக்கும்
மைதா கலந்த உணவுகள் உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும். இதனால் இரத்தழுத்தம் , இருதய கோளாறு போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது.
மலச்சிக்கல் பிரச்சினை
பொதுவாக நார்ச்சத்துக்கள் கலந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கல் பிரச்சினையை குறைத்துக் கொள்ள முடியும்.
ஆனால் இதிலிருக்கும் பதார்த்தங்கள் மலச்சிக்கலை அதிகப்படுத்தும்.
இருதய கோளாறு
மைதாவிலிருக்கும் கெட்ட கொழுப்புக்கள் இரத்த நாளங்களில் படியும் இதனால் இருதய கோளாறு, இரத்த குழாய் அடைப்பு போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும்.