பற்றியெரிந்த படகு; 3 பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் மாயம்
எகிப்து கடற்கரையில் படகு தீப்பிடித்து எரிந்ததில் 3 பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளனர்.
3 பிரித்தானிய பயணிகள் மாயம்
ஞாயிற்றுக்கிழமை எகிப்தின் செங்கடலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்து எரிந்ததில் மூன்று பிரித்தானிய பயணிகளைக் காணவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
சுறாக்கள் மற்றும் டால்பின்களைப் பார்க்க நல்ல இடமாக அறியப்பட்ட எல்பின்ஸ்டோன் ரீஃப் அருகே படகு வந்து கொண்டிருந்தபோது தீப்பிடித்து.
Mohamed Al-Saif/Handout via REUTERS
15 பிரித்தானிய பயணிகள்
14 பணியாளர்கள் மற்றும் 15 பிரித்தானிய பயணிகள் உட்பட மொத்தம் 29 பேர் படகில் இருந்ததாக கூறப்படுகிறது.
மார்சா ஆலம் கடற்கரையில் Hurricane என்று அழைக்கப்படும் அந்தப் படகில் இருந்து 12 பிரித்தானியர்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட அனைவரும் காயம் ஏதும் இன்றி, நலமுடன் கரைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
Mohamed Al-Saif/Handout via REUTERS
படகு முழுவதும் தீ மற்றும் புகையால் சூழப்பட்டிருந்த காட்சிகளை சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் படம்பிடித்ள்ளார். அந்த வீடியோ இதோ:
حريق مركب سفاري بطول ٤٠ متر اسمها hurricane في جنوب البحر الأحمر و بالتحديد منطقة Elphinstone و انقاذ معظم السياح فيما عدا ٣ لا يزالوا مفقودين و يعتقد ان جنسيتهم انجليز، نتمني السلامه للجميع و ربنا ينجي المفقودين.
— RedSea_Anglers ⚓ ? ?????? (@HanySadekk) June 11, 2023
المصدر: شهود عيان pic.twitter.com/hRg1YlzNb7
மின்கசிவு காரணமாக தீ விபத்து
படகு ஜூன் 6 செவ்வாய் அன்று போர்ட் காலிப்பில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை திரும்பி வரவிருந்தது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பிற படகுகள் மூலம் 3 பிரித்தானிய பயணிகளை தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது.
Mohamed Al-Saif/Handout via REUTERS
Mohamed Al-Saif/Handout via REUTERS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். Join Now