மீண்டும் திறக்கப்பட்ட மரண கடற்கரை! புதிய விதிகள் கட்டுப்பாடுகள் அமுல்
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு எகிப்தின் 'மரண கடற்கரை' மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா கவர்னரேட் பகுதியில் இருக்கும் மிகவும் பிரபலாமான 'டெத் பீச்' அல்-அஜாமி (Al-Ajami), கடந்த மூன்று வருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் திறக்கப்பட்டது.
அதிகாரப்பூர்வமாக பாம் பீச் என்று அழைக்கப்படும் இந்த மோசமான பகுதி ஆண்டுதோறும் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதால் 'டெத் பீச்' (Death Beach) என பெயர் பெற்றது.
tellerreport
உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த கடற்கரையை மூடுவதற்கு எகிப்திய அதிகாரிகளை கட்டாயப்படுத்தியது.
ஆனால், இப்போது புதிய பாதுகாப்பு விதிமுறைகள், கள கண்காணிப்பு மற்றும் எகிப்திய டைவிங் மற்றும் மீட்பு கூட்டமைப்பு நிர்ணயித்த தரநிலைகளுக்கு இணங்குதல் ஆகியவற்றால் இந்த கோடையில் கடற்கரை மீண்டும் எளிதாக திறக்கப்பட அனுமதித்துள்ளது.
புதிய விதிமுறைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பிறகு கடற்கரை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது.
thenationalnews
சுற்றுலா மற்றும் ஓய்வு விடுதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய நிர்வாகத் தலைவர் டாக்டர். முகமது அப்துல் ரசாக் ஆலோசனை நடத்தினார்.
"ஜெட் ஸ்கிஸ் போன்ற அவசரகால மீட்பு வசதிகளை கரையில் விட நீருக்கடியில் வைக்குமாறு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்," என்று அவர் கூறினார்.
ArabNews
அப்தெல் ரஸேக், நியமிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே நீந்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை வலியுறுத்தினார், மேலும் இந்த விஷயத்தில் தளர்வு இருக்காது என்றார்.
"தேவைப்பட்டால், உயிர்களைப் பாதுகாப்பதற்காக இந்த விதிகளை மீறும் எவரையும் நாங்கள் வலுக்கட்டாயமாக அகற்றுவோம். அறிவுறுத்தல்களில் ஏதேனும் மீறல் அல்லது தளர்வு இருந்தால் கடற்கரை உடனடியாக மூடப்படும் என்று அப்துல் ரஸேக் எச்சரித்தார்.
soutalomma
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |