விமானம் தரையிறங்கும்போது வெடித்த டயர்: பயணிகள் பத்திரம்
கெய்ரோவிலிருந்து வந்த EgyptAir விமானம் சவுதி அரேபியாவில் தரையிறங்கும் போது அதன் டயர் ஒன்று வெடித்ததாள் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கெய்ரோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து MS643 விமானம் புறப்பட்டது.
அந்த விமானம் சவுதியின் கடற்கரை நகரமான ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல்லாஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது அதன் டயர் ஒன்று வெடித்ததாக EgyptAir ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
thislifeintrips
போயிங் 738 ரக விமானம் ஓடுபாதையில் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் அனைத்து பயணிகளும் காயம் ஏதுமின்றி விமானத்திலிருந்து இறங்கியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிக்கலுக்கு என்ன காரணம் என்பதை விமான நிறுவனம் விவரிக்கவில்லை, மேலும் விமானத்தின் பரிசோதனை மற்றும் பராமரிப்பு நடந்து வருவதாக கூறியது.
Repesentative image: AP