வெளிநாட்டில் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு: வெளிவரும் புதிய தகவல்
இஸ்ரேல் மீது திடீரென்று ஹமாஸ் படையினர் அதிரடி தாக்குதலை முன்னெடுத்து, 20 நிமிடங்களில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தற்போது வெளிநாட்டில் இஸ்ரேலிய பயணிகள் தாக்குதலுக்கு உள்ளான தகவல் வெளியாகியுள்ளது.
எகிப்திய உள்விவகார அமைச்சகம்
எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது இரண்டு இஸ்ரேலியர்களும் ஒரு எகிப்தியரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
@ap
சம்பவம் தொடர்பில் எகிப்திய உள்விவகார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் இன்னொருவர் காயங்களுடன் தப்பியதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் சம்பவத்தை அடுத்து உடனடியாக அந்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் தாக்குதல் நடந்த பகுதியில் பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுடன் சமாதானம்
இதனிடையே இஸ்ரேல் தரப்பும், இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்துள்ளது. இஸ்ரேல் மீது திடீரென்று தாக்குதல் தொடுத்த ஹமாஸ் படையினரால் கடும் நெருக்கடிக்கு உள்ளான நெதன்யாகு நிர்வாகம், போர் பிரகடனம் செய்துள்ளதுடன், பதில் தாக்குதலும் முன்னெடுத்துள்ளது.
@ap
இதில் காஸா பகுதி தரைமட்டமானதாகவே கூறுகின்றனர். எகிப்து பல தசாப்தங்களுக்கு முன்னர் இஸ்ரேலுடன் சமாதானம் செய்து கொண்டதுடன், இஸ்ரேல்-பாலஸ்தீன இறுக்கத்திற்கு நீண்டகாலமாக மத்தியஸ்தராகவும் பணியாற்றி வருகிறது.
சனிக்கிழமை ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதலுக்கு பின்னர் சவுதி அரேபியா மற்றும் ஜோர்டானுடன் இணைந்து எகிப்தும் ஆலோசனை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும், இஸ்ரேலிய எதிர்ப்பு உணர்வு என்பது எகிப்தில் அதிகமாகவே காணப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |