மொத்த நாட்டையும் பதறவைத்த சம்பவம்... 19 நாட்களுக்கு பிறகு கிடைத்த அதிர்ச்சி தகவல்
துருக்கியில் 8 வயது சிறுமி திடீரென்று மாயமான நிலையில், 19 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
துருக்கியின் தென்கிழக்கு மாகாணமான Diyarbakir-ல் குடும்பத்துடன் வசித்துவந்த 8 வயது சிறுமி Narin Guran திடீரென்று மாயமானார். ஆகஸ்டு 21ம் திகதி நடந்த சம்பவத்தில் கிராம மக்கள், குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட திரளான மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மட்டுமின்றி, சிறுமியின் விவகாரம் நாடு முழுவதும் பரவிய நிலையில், சமூக ஊடக பிரபலங்கள் சிலரும் இதில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முன்னெடுத்த பொலிசார், அவரது உறவினர் ஒருவரை கடந்த வாரம் கைது செய்திருந்தது.
19 நாட்களுக்கு பிறகு
இந்த நிலையில் 19 நாட்களுக்கு பிறகு தற்போது சிறுமி வசித்து வந்த கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில், நதி ஒன்றில் இருந்து சிறுமியின் உடல் மீடகப்பட்டுள்ளது.
குறித்த தகவலை துருக்கியின் உள்விவகார அமைச்சர் உறுதி செய்துள்ளார். மட்டுமின்றி, சிறுமியின் மரணத்திற்கு காரணமான நபர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என நீதித்துறை அமைச்சரும் தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிறுமி மாயமான விவகாரம் சமூக ஊடகத்தில் பேசுபொருளாக மாறியதுடன், பிரபலங்கள் பலரும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |