பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
7 கட்டங்களாக தேர்தல்
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் திகதி தொடங்கி, 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதற்கான பிரச்சாரங்களில் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றன.
ராஜஸ்தானில் சில தினங்களுக்கு முன் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், ''பொதுமக்களின் சொத்துக்களையும், தங்கத்தையும் கணக்கெடுத்து அவற்றை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சமூகத்தினருக்கு பகிர்ந்து அளிக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது'' என பிரதமர் மோடி பேசியது கண்டனங்களைப் பெற்றது.
அதேபோல் ராகுல் காந்தி தேர்தல் சூழலை சீர்குலைப்பதற்காக மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் நாட்டில் வடக்கு, தெற்கு பிரிவினையை ராகுல் காந்தி உருவாக்கி வருகிறார் என பா.ஜ.க புகார் அளித்தது.
விளக்கம் அளிக்க உத்தரவு
பிரதமர் மோடி பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக காங்கிரஸ் கட்சியும் அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.
இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 29ஆம் திகதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் மோடி மற்றும் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் விளக்கம் தர வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |