மாதம்தோறும் ட்ரம்புக்கு ரூ.376 கோடி நிதியுதவி வழங்க போகும் எலான் மஸ்க்?
தேர்தல் முடியும் வரை ட்ரம்புக்கு ரூ.376 கோடி நிதியுதவி வழங்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க் நிதியுதவி?
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், தான் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், நடுநிலையாக இருக்க போவதாகவும் உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் (Elon Musk) கூறியிருந்தார்.
ஆனால், அவர் மறைமுகமாக டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவு தருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இதனிடையே, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் பிரச்சார கூட்டத்த்தில் பேசிக்கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார்.
இதில் அவரது வலது காதின் மேல் பகுதியை துளைத்தபடி குண்டு சென்றதில் ரத்தம் சொட்டியபடி அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டார்.
இதையடுத்து, எலான் மஸ்க் வெளிப்படையாக டிரம்புக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இந்நிலையில் எலான் மஸ்க், டிரம்புக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பது மட்டுமல்லாமல், அவரின் தேர்தல் செலவுகளுக்காக நிதி திரட்டி வரும் 'கிரேட் அமெரிக்கா பிஏசி' (America PAC) என்கிற அரசியல் அமைப்புக்கு 45 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.376 கோடி) வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது தேர்தல் முடியும் வரை அவர் இந்த தொகையை வழங்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. ஆனால், இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |